திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தை உள்ளது. இந்தச் சந்தைக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வெளிமாநிலங்களிலிருந்தும் வருகின்றன. அதேப்போல், இங்கிருந்து கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டும் செல்கின்றன.
இதனால் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க வெளிமாநிலங்களிலிருந்து வரும் லாரிகளில் இன்று ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதேபோல், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு மருத்துவர் தலைமையிலான குழுவினர் இதை கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:வதந்திகளை நம்ப வேண்டாம் - கோயம்பேடு சந்தை உண்டு!