கரோனா வைரசின் (தீநுண்மி) இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிவேகமாகப் பரவிவருவதால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.
பேரணி
பழனியில் கரோனா தீநுண்மி தொற்று விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. எனவே பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அடிவாரம் பகுதியில் உள்ள பாத விநாயகர் கோயில் முன்பு பேரணி தொடங்கியது.
எமதர்மராஜா கரோனா
மேலும், இந்தப் பேரணியின் முகப்பு வாயிலில் எமதர்மராஜா வேடம் அணிந்தும் கரோனாவை விளக்கும் வகையிலும், கரோனா வேடமணிந்து வியாபாரிகள் ஊர்வலமாகச் சென்றனர். இந்நிகழ்வில்,
- அரிசி கடை வியாபாரிகள் சங்கம்,
- சரவணபொய்கை வியாபாரிகள் சங்கம்,
- பாத்திரக்கடை உரிமையாளர்கள் சங்கம்,
- சந்தை வியாபாரிகள் சங்கம்,
- பேருந்து நிலைய உள்ளிருப்புக் கடை வியாபாரிகள் சங்கம்,
- நகர அனைத்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம்,
- ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் சங்கம்,
- காலணிக் கடை வியாபாரிகள் சங்கம்,
- பர்னிச்சர் கடை வியாபாரிகள் சங்கம்,
- பிளைவுட் கடை வியாபாரிகள் சங்கம்,
- கைப்பேசி கடை உரிமையாளர்கள் சங்கம்,
- தேநீர் கடை உரிமையாளர்கள் சங்கம்,
- துணிக்கடை உரிமையாளர்கள் சங்கம்
உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கரோனா தீநுண்மி பற்றிய விழிப்புணர்வு கருத்துகளைப் பொதுமக்களுக்கும், வியபாரிகளுக்கும் தெரிவித்தவாறு பேரணியாகச் சென்றனர். மேலும், அங்கிருந்த அனைவருக்கும் கேக், தேநீர் வழங்கப்பட்டனர்.