தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 725ஆக உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதனிடையே, திண்டுக்கல் நகைக்கடை சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கரோனா பரவல் காரணமாக இன்று (ஜூலை 7) முதல் 10 நாட்களுக்கு நகைக் கடைகள் இயங்காது என்று அறிவித்துள்ளனர்.
இது குறித்து நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், "திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கம், வெள்ளி நகை விற்பனை செய்யும் நகைக்கடைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வியாபார ரீதியாக பொதுமக்களை சந்திக்கின்றனர்.
இந்த கரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனால் அனைவரின் பாதுகாப்பு கருதியும், அரசுக்கு ஒத்துழைப்பு தரும் வண்ணமும் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள், நகை கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் என அனைவரின் பாதுகாப்பு கருதி முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை" என்று கூறினர்.
இதையும் படிங்க: இன்று முதல் சென்னையில் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும்