திண்டுக்கல் காங்கிரஸ் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராகக் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டார்.
இந்நிலையில், கூட்டம் நடைபெற்றுகொண்டிருந்தபோது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி ராஜா பேசும்போது, சித்தரேவு பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணி பெயரை சொல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணி மேடையிலிருந்த அப்துல்கனி ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்துல் கனி ராஜாவின் ஆதரவாளர்களுக்கும் பாலசுப்பிரமணி ஆதரவாளர்களுக்கும் இடையே மேடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையிலேயே இது அரங்கேறியது. பின்னர், அழகிரி பேசுகையில் தேவையில்லாமல் பிரச்னையை எழுப்பி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர்களின் மாவட்ட பதவிகள் பறிக்கப்படும் என எச்சரித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: