ETV Bharat / state

குறைகளை அடுக்கிய திமுக கவுன்சிலர்.. போதும் உட்காருங்க என கூறிய மேயர்.. திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு! - திண்டுக்கல் மேயர்

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் வார்டுகளில் உள்ள குறைகளை கூறிய திமுக உறுப்பினரை திமுக மேயர், திமுக துணை மேயர் இருவரும் பேசியது போதும் என உட்கார கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

In Dindigul Corporation meeting conflict between DMK councillors it caused dissatisfaction among the public
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர்களுக்குள் கருத்து மோதல்
author img

By

Published : Jun 1, 2023, 2:57 PM IST

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர்களுக்குள் கருத்து மோதல்

திண்டுக்கல்: கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி பெரும்பான்மையான வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து ஓர் ஆண்டு முடிவதற்குள்ளாகவே பல்வேறு மாநகராட்சிகளில் திமுக உறுப்பினர்களுக்குள்ளாகவே மோதல் துவங்கியது.

வழக்கமாக மாநகராட்சி, நகராட்சி கூட்டங்களில் வார்டுகளுக்கு தேவையான வசதிகள் குறித்த வாதங்களின் போது எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் ஆளும் தரப்பிற்கும் தான் மோதல் நடக்கும். ஆனால் திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மாநகராட்சிகளில் திமுக உறுப்பினர்களுக்குள்ளாகவே மோதல் ஏற்பட்டு பெரும் விவாதமாக ஆகியுள்ளது. அதிலும் திருநெல்வேலி மாநகராட்சி திமுக உறுப்பினர்கள், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்பாகவே மோதிக் கொண்டது பெரும் சர்ச்சையானது.

அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மாநகராட்சியும் இணைந்து உள்ளதோ என்ற கேள்வி நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்திற்கு பின்பாக பொதுமக்கள் மத்தியில் எழுந்தூள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியின் கூட்டம் நேற்று மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் கூட்டத்தில் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 108 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக, திமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தனர். குறிப்பாக மூன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த இந்திராணி, “நான் பொதுசுகாதாரக்குழு தலைவராக உள்ளேன். பதவியேற்று 15 மாதமாகியும் பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பதால் மக்களும் கேள்வி கேட்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. மக்களுக்கு நான் சேவை செய்ய தயாராக இருக்கிறேன்.

அதிகாரிகளுக்கு அதிக வேலை இருக்கலாம். உங்களின் வேலையை எங்களுக்கு பிரித்து தாருங்கள். இதுதொடர்பாக பல முறை மேயரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நாங்கள் சும்மா வந்து போக ரப்பர் ஸ்டாம்ப் இல்லை” என பேசினார். இதில் ஆவேசமடைந்த மேயர், துணை மேயர் இருவரும் கவுன்சிலர் இந்திராணியை சபை நாகரீகம் தெரிந்து பேச வேண்டும். முதலில் உட்காருங்கள் கோபத்துடன் கடுமையாக பேசினர்.

மேயர், துணை மேயரின் பேச்சால் கவுன்சிலர் இந்திராணியின் முகம் மாறியது. பின்னர் அவர் சோகமாக இருக்கையில் அமர்ந்து கொண்டார். மேயர், துணை மேயர் நடவடிக்கை மற்ற கவுன்சிலர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் திமுகவைச் சேர்ந்த பல மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் எந்தவித வேலைகளும் சரிவர நடைபெறுவது கிடையாது என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் மாநகராட்சி கூட்டம் முழுமையடையாமல் பாதியில் முடித்து வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: விவசாய குறைதீர் கூட்டத்தில் ஐபிஎல் பார்த்த அரசு அதிகாரிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.