திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மாணவிகள் கலந்துகொண்டனர். இதனை திண்டுக்கல் துணை ஆட்சியர் விஸ்வநாதன், கொடைக்கானல் காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆத்மநாதன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி, அண்ணாசாலை வழியே மூஞ்சிக்கல் வரை சென்றது. இதில் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமெனவும், வாக்களிப்பது ஜனநாயக கடமை உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை மாணவிகள் ஏந்திச்சென்றனர்.
இதையும் படிங்க: சந்தேகத்தை எழுப்பும் 150க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் நீக்கம்