ETV Bharat / state

திண்டுக்கல்லில் பெண் வாக்காளர்களே அதிகம் : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - 2020 final voters list

திண்டுக்கல் : திண்டுக்கல் ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Final voters list
மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி பேட்டி
author img

By

Published : Feb 17, 2020, 4:31 PM IST

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதன் மூலம் திண்டுக்கல்லில் ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதனை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வெளியிட்டார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சியினர் முன்னிலை வகித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பேட்டி

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, “பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் 2 ஆயிரத்து 891 ஆண் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 100 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோலவே, பெண் வாக்காளர்களில் 3 ஆயிரத்து 230 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு 92 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 ஆயிரத்து 358 ஆண் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 40 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண் வாக்காளர்களில் 2 ஆயிரத்து 785 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 49 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 ஆயிரத்து 308 ஆண் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 62 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண் வாக்காளர்களில் 2 ஆயிரத்து 689 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 105 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 2 ஆயிரத்து 660 ஆண் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 64 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண் வாக்காளர்களில் 3 ஆயிரத்து 173 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு 84 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நத்தம் தொகுதியில் 3 ஆயிரத்து 277 ஆண் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண் வாக்காளர்களில் 3 ஆயிரத்து 565 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 3 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வேடசந்தூர் தொகுதியில் 2 ஆயிரத்து 590 ஆண் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 52 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண் வாக்காளர்களில் 2 ஆயிரத்து 892 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு 42 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் தொகுதியில் 2 ஆயிரத்து 137 ஆண் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 8 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண் வாக்காளர்களில் 2 ஆயிரத்து 381 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு 19 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்களில் 18 ஆயிரத்து 221 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 326 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெண் வாக்காளர்கள் 20 ஆயிரத்து 715 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 326 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்து 895 ஆண் வாக்காளர்கள், 20 ஆயிரத்து 321 பெண் வாக்காளர்கள் 19 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38 ஆயிரத்து 235 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர், ”என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணிய பிரசாத் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : 'உரிமையை இழந்ததால் உலக வங்கியிடம் கையேந்தி நிற்கிறோம்': பட்ஜெட் குறித்து சாடிய பாலகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.