திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம ரயில்வேகேட் அருகில், ரயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத உடல் ஒன்று கிடந்துள்ளது. இது தொடர்பாக, அப்பகுதியினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் சின்னாளப்பட்டி போக்குவரத்து நகர் பகுதியைச் சேர்ந்த அடைக்கலம் (59) என்பதும், அவர் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் உதவி பதிவாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
அடைக்கலம் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அவரது குடும்பத்தில் பிரச்னை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அமிர்தா எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பட்டப்பகலில் சைக்கிள் திருடும் இளைஞர்கள்!