ETV Bharat / state

வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக, அமமுக தொண்டர்கள்! - அதிமுக

திண்டுக்கல்: எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக, அமமுக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய தொண்டர்கள்

author img

By

Published : Jan 17, 2020, 5:55 PM IST

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளான இன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமமுக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், அங்கிருந்த ஒலிபெருக்கியில் எம்ஜிஆர் குறித்தும் அமமுக ஆட்சி சாதனைகள் குறித்தும் பேச தொடங்கினர்.

அப்போது, அங்கு வந்த அதிமுகவினர், தாங்கள் ஏற்பாடு செய்த ஒலிபெருக்கியை அமமுகவினர் எவ்வாறு பயன்படுத்தலாம் எனக் கூறி அமமுக தொண்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய தொண்டர்கள்

அதன் பின்னர் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் மேயரும் மாவட்ட செயலாளருமான மருதராஜ், அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அதிமுக கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா: அதிமுகவினர் மரியாதை

Intro:திண்டுக்கல் 17.1.20

திண்டுக்கல்லில் எம்ஜிஆர் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக, அமமுக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Body:தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மற்றும் அமமுக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது அமமுக கட்சியினர் முதலில் எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அங்கிருந்த ஒலிபெருக்கியில் எம்ஜிஆர் குறித்தும் அவரது ஆட்சி சாதனைகள் குறித்தும் பேச துவங்கினர். அப்போது அங்கு வந்த அதிமுகவினர் தாங்கள் ஏற்பாடு செய்த ஒலிபெருக்கியை அமமுகவினர் எப்படி பயன்படுத்தலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் மேயரும், மாவட்ட செயலாளருமான மருதராஜ் அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அதிமுக கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.