தமிழ்நாடு அரசு கரோனா தளர்வுகளை அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி இறைச்சிக் கடைகள் போன்றவற்றைத் திறக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், குடியிருப்புகளுக்கேச் சென்று விற்பனை செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலில் இறைச்சிகள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய கொடைக்கானல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பையா, திமுக நகரச் செயலாளர் முகமது இப்ராஹிம் ஆகியோர் தொடங்கிவைத்தனர். கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி விற்பனையில் ஈடுபட அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.