திண்டுக்கல்: பழனியில் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்(21). இவர் அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி 3 ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று (ஜூன் 17) தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது, பழனி அரசு மருத்துவமனை அருகே முன்னே சென்ற ஆட்டோ ஒன்றை முந்திச் செல்ல முயன்றார்.
அப்போது எதிரே வந்த வேனின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயம் அடைந்த நிலையில், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துகளைத் தவிர்க்க: இருசக்கர வாகனத்தில் செல்லுவோர் விபத்துகளில் சிக்கிக்கொண்டு தங்களின் இன்னுயிரை இழக்காமல் இருக்க மிதமான வேகத்தில் சாலை விதிகளை பின்பற்றி பயணம் செய்தால் விபத்துகளையும் அதனூடாக வரும் பாதிப்புகளையும் தவிர்க்கலாம். எனவே, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் மறவாதீர்கள்.
இதையும் படிங்க: பட்டபகலில் செயின் அறுப்பு - திருடனை சம்பவ இடத்தில் மடக்கிய டீக்கடை தொழிலாளி,ஆட்டோ ஓட்டுனர்