திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் தனியாருக்கு சொந்தமான மெடிக்கல் ஷாப் இயங்கி வருகிறது. இங்கு நள்ளிரவு கடையை அடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து கேரளாவுக்கு வெங்காயம் ஏற்றிச் சென்ற ஈச்சர் வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மருந்துக்கடைக்குள் புகுந்தது.
கடையில் இருந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.