இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அணில் சேமியா நிறுவன உரிமையாளர் சுகுமார், 'அணில் சேமியா அனைவரின் வீட்டிலும் இருக்கும் உணவுப் பொருள். உணவுச் சந்தையில் தனி இடம் பெற்றுள்ள எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் பணம் பறிக்கும் எண்ணத்துடன் அணில் புட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
அணில் சேமியாவின் தயாரிப்பு சுகாதாரமற்ற முறையில் செய்யப்படுவதாகச் சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பொய்யாக உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பி எங்கள் நிறுவனத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படுகின்றனர். இது கடந்த ஒரு மாதமாக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எங்கள் நிறுவனத்தின் பங்குதாரரை மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணம் கேட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நேசன், சிவக்குமார், ஸ்ரீதர் இவர்கள் மீது எட்டு பிரிவுகளில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். எங்கள் நிறுவனத்தைக் குறித்து சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என்று கூறினார்.
இதையும் படிங்க... திண்டுகல்லில் மருத்துவர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்து