பழனியில் மாற்று கட்சிகளில் இருந்து பாஜகவில் உறுப்பினர்கள் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
மேலும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது, அண்ணாமலை மற்றும் பாஜகவினர் உரிய அனுமதி இல்லாமல் தடையை மீறி ஊர்வலமாக சென்றனர்.
இந்நிலையில் கரோனா தொற்று காலத்தில் மண்டபத்தில் அதிகளவில் கூட்டம் கூட்டி விழா நடத்தியது, காவல்துறை அனுமதி பெறாமல் தடையை மீறி ஊர்வலம் சென்றது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மற்றும் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் மீது பழனி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு அண்ணாமலை ஆதரவு!