திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே பைபாஸ் சாலையில், தேனி சாலையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வாழைத்தார் ஏற்றி சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென வத்தலக்குண்டு நோக்கி சரக்கு வாகனம் திரும்பியபோது, அதிவேகமாக பின்னால் வந்த கார், கட்டுப்பாடின்றி சரக்கு வாகனத்தின் பின்னால் பலமாக மோதியது.
இதனையடுத்து காருக்குப் பின்னால் வந்த ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜனின் கார், சரக்கு வாகனத்தில் மோதிய காரின் பின்னால் பலத்த சத்தத்துடன் மோதியது.
அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் மேல் பயணம் செய்த ஆறு பெண்கள் உட்பட ஏழு கூலித் தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு வத்தலக்குண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்விபத்தில் எம்.எல்.ஏ மகாராஜன் காயம் எதுவுமின்றி தப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வத்தலக்குண்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.