திண்டுக்கல்: கள்ளிமந்தையம் அருகே நேற்று (ஜூன்14) திருப்பூரிலிருந்து மதுரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. செங்காட்டான்வலசு பிரிவு அருகே சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து சுதாரித்து கொண்ட ஓட்டுனர் வேல்முருகனும், திருமுருகன் என்பவரும் காரில் இருந்து வெளியேறி தப்பினர்.
அப்போது அவ்வழியாக வந்த உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உடனடியாக அவரது காரை நிறுத்தி நேரில் சென்று காரில் வந்தவர்களிடம் நடந்தவை குறித்து விசாரித்தார்.
இதுதொடர்பான தகவலின் பேரில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் காரில் வந்த இருவரும் உடனடியாக மதுரை செல்வதற்கு அமைச்சர் சக்ரபாணி மாற்று கார் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் நிம்மதியாக இருக்கும் ஒரே குடும்பம் கோபாலபுரம் குடும்பம் தான் - அண்ணாமலை