திண்டுக்கல்: மதுரை மாவட்டம் தேனூரை சேர்ந்தவர் கோகுல். வழக்கறிஞரான இவர் தீபாவளி விடுமுறையையொட்டி தனது மனைவி நந்தினி, குழந்தை தன்யா, மாமியார் அழகுராணி மற்றும் நண்பர் கார்திக்குடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
இவர்கள் அனைவரும் சுற்றுலா முடிந்து நேற்று (நவ.5) இரவு கொடைக்கானலில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக சாலை சரியாக தெரியாத காரணத்தால், கட்டுப்பாட்டை இழந்த கார், 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மூவர் உயிரிழப்பு
இது குறித்து தீயணைப்புத் துறை மற்றும் பெரியகுளம் வடகரை காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரியகுளம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இவ்விபத்தில் கோகுலின் மனைவி நந்தினி, குழந்தை தன்யா மற்றும் மாமியார் அழகுராணி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வழக்கறிஞர் கோகுல் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து பெரியகுளம் வடகரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம் - மருத்துவமனையில் சிகிச்சை