ETV Bharat / state

கஞ்சா வியாபாரி கழுத்தை அறுத்து படுகொலை - கழுத்தை அறுத்து படுகொலை

திண்டுக்கல் அருகே கஞ்சா வியாபாரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா வியாபாரி கழுத்தை அறுத்து படுகொலை
கஞ்சா வியாபாரி கழுத்தை அறுத்து படுகொலை
author img

By

Published : Apr 17, 2021, 4:27 PM IST

திண்டுக்கல்: சின்னாளபட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வேலாம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கும், உறவினரான சின்னாளபட்டி வடக்குத்தெருவை சேர்ந்த ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துளளது. நேற்று ( ஏப்ரல் 16) இரவு ராஜா, குடிபோதையில் ராஜபாண்டி வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மேலக்கோட்டை கிணறு அருகே ரத்தகறை படிந்த உடைகள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர், தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து ராஜபாண்டியன் உடலை மீட்டனர். அவரை கொலை செய்து கல்லால் கட்டி உடலை கிணற்றுக்குள் வீசியது தெரியவந்தது.

கஞ்சா வியாபாரி கழுத்தை அறுத்து படுகொலை

இதில் தொடர்புடைய ராஜா அவரது மகன் சரத்குமாரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராஜா மீது சின்னாளபட்டி, அம்பாத்துரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த ராஜா, இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலையானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கல்லூரியில் ஆங்கிலப் பாடகனாக அசத்திய விவேக்' - நினைவுகளைப் பகிர்ந்த ஓவியர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.