திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கரோனா இல்லாத இடமாக இருந்து வருகிறது. இதற்கு முக்கியக்காரணம் தூய்மைப் பணியாளர்களின் தொய்வில்லாத பணிதான். இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான பிரையன்ட் பூங்காவில் பல லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. ஆனால், சீசன் தொடங்கிய நிலையிலும் ஊரடங்கால், சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனிடையே ஊரடங்கின்போது தொடர்ந்து விடாது பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரையன்ட் பூங்கா மலர்களைக் காண சிறப்பு ஏற்பாடு பூங்கா நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.
தொடர்ந்து பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மன உளைச்சல் இன்றி புத்துணர்வுடன் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பூங்காவைச் சுற்றிப் பார்த்த தூய்மைப் பணியாளர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சி பொது மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஊதிய உயர்வு வழங்கிட அரசாணை பிறப்பிக்க வேண்டி கோரிக்கை!