திண்டுக்கல்: வேடசந்தூர் அடுத்த குஜிலியம்பாறை அருகில் உள்ள கரும்பாறைபட்டியல் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இதில், தேங்கியிருந்த நீரில், பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரது மகன் கவி பாரதி (15), மதிவாணன் என்பவரது மகன் கேசவன்(14) ஆகிய இரண்டு சிறுவர்கள் நேற்று (பிப்.14) மாலை மீன்பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மீன் பிடிக்கச் சென்ற சிறுவர்கள் நீண்ட நேரம் வீட்டிற்கு வராத நிலையில், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் சிறுவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், சிறுவர்கள் மீன்பிடிக்கச் சென்றதாக பெற்றோர்களுக்குத் தெரியவர, அருகில் இருந்த குவாரிக்கு சென்ற பெற்றோர் அங்கு அவர்களின் ஆடை இருப்பதை பார்த்துக் கதறி அழுதனர்.
அதனைத் தொடர்ந்து, குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இன்று (பிப்.15) காலை கல்குவாரியில் குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் சிறுவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த தேடுதலில், சிறுவர்கள் இருவரும் சடலமாக மீட்டனர் . சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த குஜிலியம்பாறை காவல்துறையினர் சிறுவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு