திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை இந்திராநகரில் வசித்துவந்தவர் ஜெயஸ்ரீ (22). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே தொழிற்சாலையில் பணியாற்றிவந்த பழனியைச் சேர்ந்த தங்கத்துரை (27) என்பவரைக் காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ள தங்கதுரையிடம் தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடிப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கத்துரை தனது நண்பன் ஜெகநாதன் (27) உதவியுடன் ஜெயஸ்ரீயை கொலைசெய்து, உடலை முள்புதரில் வீசிச்சென்றுள்ளார்.
இத்தகவல் அறிந்த கள்ளிமந்தையம் காவல் துறையினர் பெண்ணின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தங்கத்துரை, ஜெகநாதன் இருவரும் இணைந்து ஜெயஸ்ரீயை கொலைசெய்தது தெரியவந்தது.
பின்னர் இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர், திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியாவின் பரிந்துரையின்பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து நேற்று (பிப் 4) மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் முள்புதரில் இறந்துகிடந்த இளம்பெண்: கொலையா?