நாடு முழுவதும் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வரும் நாள்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேசிய சேவா சமிதி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணன், சுப்புராஜ், தமிழ்நாயகம், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும், சாகாதாரத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.