திண்டுக்கல்: ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான பன்றிமலை, ஆடலூர், தர்மத்துபட்டி, கோம்பை, சோலைக்காடு பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டுயானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில் தர்மத்துப்பட்டியில் யானை தொந்தரவு உள்ளதாக தகவல் அளித்தும் வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வருவதற்கு தாமதமானதால் சோலைக்காடு கிராம மக்கள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக தர்மத்துப்பட்டி-பன்றிமலை சாலையில் இன்று (ஆக.11) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து - லாரி ஓட்டுனர், கிளீனர் தீயில் கருகி பலி