திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் கனகராஜ். இவர் நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ராஜா என்பவரின் டீக்கடையில் டீ குடித்துவிட்டு வீட்டிற்கு பருப்பு வடை பார்சல் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், வீட்டிற்கு சென்று சாப்பிடுவதற்காக வடையை பிய்க்கும் போது பருப்பு வடைக்குள் முழு பிளேடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக நிலக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு புகார் செய்தார். அவரது புகாரை தொடர்ந்து நிலக்கோட்டை தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் கடை உரிமையாளரிடம் விற்கப்பட்ட வடையில் எப்படி பிளேடு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து கடையில் உள்ள பகுதிகளிலும் ஆய்வு செய்து கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினார். அங்கு வடை தயாரிக்க பயன்படுத்திய மாவு, பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மூலப் பொருட்களை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். இருப்பினும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றன நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் வடையில் பிளேடு இருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான அரசாணையை ரத்த செய்ய கோரி மனு...!