ETV Bharat / state

ஒருமையில் பேசிய சார் ஆட்சியர்... முற்றுகையிட்ட பாஜகவினர்!

திண்டுக்கல்: கொடைக்கான‌லில் நடைபெற்ற குறைதீர் கூட்ட‌த்தில் சார் ஆட்சிய‌ர் ஒருமையில் பேசிய‌தாக‌க்கூறி வ‌ட்டாசிய‌ர் அலுவ‌ல‌க‌ம் முன்பு பாஜ‌கவின‌ர் முற்றுகை ஆர்பாட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.

BJP siege demonstration in Kodaikanal condemning the sub Collector for speaking disrespectfully

author img

By

Published : Nov 30, 2020, 6:28 PM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் வார‌ம் தோறும் திங்க‌ள்கிழ‌மை ம‌க்க‌ள் குறைதீர் கூட்ட‌ம் வ‌ட்டாசிய‌ர் அலுவ‌ல‌க‌த்தில் ந‌டைபெறும். அதேபோல இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு சார் ஆட்சிய‌ர் சிவ‌குரு பிர‌பாக‌ர‌ன் த‌லைமை வ‌கித்தார்.

இதில், ம‌க்கள் த‌ங்க‌ள் குறைக‌ளை ம‌னுக்க‌ளாக‌ அளித்து வ‌ந்த‌ன‌ர். தொட‌ர்ந்து பாஜ‌கவினரும் தங்கள் ம‌னுக்க‌ளை அளிக்க‌ வ‌ந்த‌ன‌ர். அப்போது பாஜ‌கவினரை சார் ஆட்சியர் ஒருமையில் பேசிய‌தாக‌கூறப்படுகிறது.

இதையடுத்து, பாஜகவினர் வட்டாட்சியர் அலுவ‌ல‌க‌த்தின் வெளியே முற்றுகை ஆர்பாட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர். தொட‌ர்ந்து சார் ஆட்சிய‌ரை க‌ண்டித்து முழக்கங்களையும் எழுப்பின‌ர்.

போராட்ட‌ம் ந‌டைபெறும் வேளையில் சார் ஆட்சிய‌ர் சிவ‌குரு பிர‌பாக‌ர‌ன் மக்கள் குறைதீர் கூட்ட‌த்தை பாதியிலேயே கைவிட்டு ம‌ற்றொரு வ‌ழியில் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ பாஜ‌க‌வின‌ரிடம் காவ‌ல் துறையின‌ர் பேச்சு வார்த்தையில் ஈடுப‌ட்ட‌தால், அவர்கள் க‌லைந்து சென்ற‌ன‌ர்.

இதையும் படிங்க: ஆயிரம் அமித் ஷா வந்தாலும் இதை மாற்ற முடியாது - சுப்புராயன் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.