ETV Bharat / state

பழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் - அண்ணாமலை - bjp Annamalai request

பழனி முருகன் கோயில் குடமுழுக்குப் பணிகளை விரைந்து நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தவேண்டும்

author img

By

Published : Dec 15, 2021, 7:13 PM IST

திண்டுக்கல் : பழனியில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு அண்ணாமலை வருகைதந்தார். அதன் பின்னர், பழனி முருகன் மலைக் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம்செய்தார்.

இதனையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர், "பழனி முருகன் கோயில் பாலாலயம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இதுவரை குடமுழுக்கு நடத்தப்படவில்லை.

கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாகக் குடமுழுக்கு நடத்தப்படாத நிலையில் ஆகம விதிகளின்படி விரைவில் பழனி முருகன் கோவில் குடமுழுக்கை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

பழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துக

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டுகள், காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடத்தப்படுகிறது என்றும், இருந்தாலும் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்த பிறகுதான், அதன் உண்மைத்தன்மை தெரியும் எனவும் தெரிவித்தார்.

பழனி முருகன் கோயில்
பழனி முருகன் கோயில்

அப்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சிவகங்கையில் புரவியெடுப்பு திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.