திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, நாயுடுபுரம், எம்.எம். தெரு, ஏரிச்சாலை, கீழ்பூமி உள்ளிட்ட நகர் பகுதிகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் காட்டு மாடுகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கமாகிவருகிறது. பகல் இரவு நேரங்களில் காட்டுமாடு புகுவதால் வாகன ஓட்டிகளும் பெரும் அவதி அடைந்து வந்தனர்.
காட்டுமாடு புகுவதை தடுப்பதற்கு வனத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து நாயுடுபுரம் கான்வென்ட் சாலை அருகே புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த வீட்டு பசு மாட்டை காட்டு மாடு ஒன்று முட்டி தாக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு உயிரிழந்தது. காட்டு மாடுகள் நகர்ப் பகுதிக்குள் புகுந்து வீட்டு விலங்குகளை தாக்காமல் இருக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.