திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது. வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் உணவுக்காக நகர்ப்பகுதிக்குள் வலம்வருகின்றன. மேலும், இவ்வாறாக வரும் வனவிலங்குகள் சில நேரங்களில் பொதுமக்களையும் தாக்கிவருகிறது.
இந்நிலையில் நேற்று(ஏப். 12) கொடைக்கானல் ஃபரன்ஹில் சாலைப் பகுதியில் வனப்பகுதிக்குள்ளிருந்து வந்த ஒற்றை காட்டெருமை சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் நெகிழிக் குப்பைகளை உண்டது.
குப்பைகளை உண்ணும் வனவிலங்குகள் அண்மைக்காலமாக இறந்துவருகின்றன. தொடர்ந்து வனத் துறைக்குத் தெரிவித்தும் அலட்சியம்காட்டுவதாகவும், வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டவும் அவற்றுக்குத் தேவைப்படும் உணவுகளை வனப்பகுதியில் ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும் விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து மம்தா தர்ணா