ETV Bharat / state

வத்தலக்குண்டு காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர் கொலை! - dindigul news

திண்டுக்கல்: வேகமாக செல்லக்கூடாது என எச்சரித்த வத்தலக்குண்டு காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஒருவரை, ஷேக் முகமது என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வத்தலகுண்டு கொலை  batlagundu friend of police murder  திண்டுக்கல் செய்திகள்  காவல் நண்பர்கள் குழு கொலை  dindigul news  வத்தலகுண்டு
வத்தலகுண்டு காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர் கொலை
author img

By

Published : May 19, 2020, 4:00 PM IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு இபி காலனியைச் சேர்ந்த நவீந்திரன், கரோனா பெருந்தொற்று தடுப்புப் பணியில் காவல் துறையுடன் இணைந்து, காவல் துறை நண்பர்கள் குழுவில் பணி செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை காமராஜபுரம் பகுதியில் நவீந்திரன், அவரது நண்பர்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த ஷேக் முகமதுவை, தடுத்து நிறுத்தி இப்பகுதியில் வேகமாக செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். இதில், ஷேக் முகமதுவுக்கும் நவீந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அருகிலிருந்தவர்கள் ஷேக் முகமதுவை பேசி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து அங்கிருந்து சென்ற ஷேக் , இரவில் அங்கு வந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து நவீந்திரனை சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் நவீந்திரன் சாய்ந்தவுடன் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் ஷேக் சரணடைந்துள்ளார்.

பின்னர், நவீந்திரன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதிலும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால், நவீந்திரனின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

தெடார்ந்து காவல் துறையினர், நவீந்திரனின் உறவினர்களை சமாதானம் செய்து ஷேக் முகமது மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து வத்தலக்குண்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

இதையும் படிங்க: பொள்ளாச்சி அருகே பெண் கொலை: கணவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.