திண்டுக்கல்: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டும், 76ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும் இந்தியா - பங்களாதேஷ் இடையே மாற்றுத்திறனாளிகளுக்கான டி-20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இவை டிசம்பர் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நத்தம் என்பிஆர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றன.
இதில் 5 போட்டிகள் கொண்ட டி-20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளும் தலா 2-2 என்ற கணக்கில் சமமானது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 29.3 ஓவரில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்பு ஆடிய இந்திய அணி 22.5 ஓவரில் 162/3 எடுத்தது வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டிகளை சேர்த்து
ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இன்றைய ஒருநாள் போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் பந்து வீச்சாளா், ஒருநாள் போட்டியின் தொடர்நாயகனாக சன்மேக்கர், டி-20 போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் ராஜ் மகேஷ், தொடர் நாயகனாக பங்களாதேஷ் அணியின் ரசூல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒரு நாள் தொடரை கைப்பற்றிய வங்கதேச அணிக்கு வெற்றி கோப்பையை தமிழ்நாடு பாஜக பட்டியல் அணி தலைவா் தடா. பெரியசாமி வழங்கினாா். டி-20 போட்டியின் வெற்றிக் கோப்பையை தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலா் சுமதி வெங்கடேஷ் வழங்கினாா். ஒருநாள் தொடர் நாயகன் விருதை ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் கதிரவன் வழங்கினார். T20 போட்டிக்கான தொடர் நாயகன் விருதையும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன் வழங்கினார்.
இந்நிகழ்விற்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் மற்றும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரிய துனை தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளர் முத்துக்குமார், முன்னிலையில் வகித்தார். இந்த தொடருக்கான ஏற்பாட்டினை (பிடிசிஏ) இயக்குநர் மனு, பொது செயலாளர் ரமி ரெட்டி, நிர்வாக குழு உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: உலகக்கோப்பை கால்பந்து: முதலாவது அரையிறுதியில் அர்ஜென்டினா - குரேஷியா மோதல்