திண்டுக்கல்: நத்தம் வனச்சரகம் கோட்டையூர் வனப்பகுதியில் விஜயலட்சுமி (31) என்பவர் வனக்காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோர் ராம்நாடு அருகே சாயல்குடி பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இவரது கணவர் பெயர் சத்தியேந்திரன். தற்போது விஜயலட்சுமி ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளாா். இதனையடுத்து, நத்தம் வனச்சரக அலுவலர் பாஸ்கரன் மற்றும் சக வனப் பணியாளர்கள் விஜயலட்சுமிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்தனா்.
அதன்படி வனச்சரக அலுவலர் பாஸ்கரன், வனவர்கள் சம்பந்தமூர்த்தி, முத்துசாமி ஆகியோா் முன்னிலையில் வனக் காப்பாளர்கள், வனக்காவலர்கள், பெண் வனக் காப்பாளர்கள் உள்ளிட்டோர் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
![baby shower ceremony](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-02-natham-forestoffice-womenvalakappu-visual-img-scr-tn10053_26012022181429_2601f_1643201069_401.jpg)
இதையும் படிங்க: மக்னா யானைக்கு சிகிச்சை அளித்தது நல்ல அனுபவம்: அண்ணா விருது பெற்ற மருத்துவர் அசோகன் நெகிழ்ச்சி