ETV Bharat / state

திண்டுக்கல்லில் மாங்காய் வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்! - AWARENESS

திண்டுக்கல்: நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதியில் மாங்காய் வியாபாரத்திற்கு, மாங்காயை இயற்கை முறையில் பழுக்க வைப்பது குறித்த வழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் மாங்காய் வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்!
author img

By

Published : May 8, 2019, 10:51 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாங்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து வெளிமாநிலங்களில் டன் கணக்கில் மாங்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் நத்தம் அருகே வேம்பார்பட்டியில் உள்ள தனியார் மாங்காய் குடோனில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மாங்காய் வியாபாரிகளுக்கு இயற்கை வழியில் பழுக்க வைக்கும் முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் மாங்காய் வணிகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில் மாங்காய் வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

Intro:திண்டுக்கல் 8.5.19

நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதிகளில் மாங்காய் வியாபாரிகளுக்கு கல்வைத்து பழுக்கவைப்பதை தவிர்த்து இயற்கை முறையில் பழுக்க வைப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Body:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் மாங்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் மாங்காய்கள் வெளிமாநிலங்களுக்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மே மாதம் முதல் தொடங்கிய மாங்காய் சீசனையடுத்து நத்தம் அருகே வேம்பார்பட்டியில் உள்ள தனியார் மாங்காய் குடோனில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மாங்காய் வியாபாரிகளுக்கு இயற்கை வழியில் பழுக்க வைக்கும் முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் நடராஜன் தலைமையில் செயற்கை முறையில் கல் வைத்து பழுக்க வைக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது. மேலும், இயற்கை முறையில் மாங்காய் சாகுபடி செய்ய வலியுறுத்தியும் அதற்கு உறுதுணையாக உள்ள ஏத்திப்பான் என்னும் இயற்கை வழிமுறையை கைக்கொண்டு பழுக்க வைப்பது குறித்தும் வியாபாரிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் மாங்காய் வணிகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.