திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பூட்டை உடைத்து ஜன்னல் வழியாக அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வங்கியில் இருந்த அலாரம் ஒலித்ததால் அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் வங்கியில் இருந்த நகைகளும், ரொக்கப்பணமும் தப்பின.
இது குறித்து புறநகர் காவல் கண்காணிப்பாளர் வினோத், இன்ஸ்பெக்டர் ராஜமுரளி ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து ரூபி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வங்கி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை!