ETV Bharat / state

மதமாற்றம் செய்வதாகக் கூறி காதல் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல் - இந்து முன்னணி நிர்வாகி மீது புகார் - பிரின்சி

வடமதுரை அருகே இந்து இளைஞரை காதல் திருமணம் செய்த கிறிஸ்தவப் பெண்ணைத் தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதமாற்றம் செய்வதாகக் கூறி காதல் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல் - இந்து முன்னணி நிர்வாகி மீது புகார்

author img

By

Published : Aug 10, 2023, 11:04 AM IST

மதமாற்றம் என கூறி காதல் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல் - இந்து முன்னணி நிர்வாகி மீது புகார்

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா, பால்கேணிமேடு பகுதியைச் சேந்தவர் சுப்பையா மகன் முருகன். ஏ.வெள்ளத்தைச் சேர்ந்த மரிய சிங்கராயர் தம்பதியினரின் மகள் பிரின்சி. மேலும் இவர்கள் இருவரும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

மேலும், இந்த இருவரும் அய்யலூர் வடமதுரை எரியோடு பகுதி, சந்தை அருகே காய்கறி வியாபாரம் பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் முருகனின் அக்கா வீட்டிற்கு பிரின்சி சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மற்றும் மனைவி மஞ்சுளா வந்துள்ளனர். அப்போது மஞ்சுளா தனது கணவரிடம் இந்த பெண் மதமாற்றம் செய்கிறாள் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:"குழந்தை எப்படி சிகப்பாக பிறக்கும்?" - காதல் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை!

மேலும், சற்று நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரையும் ஈஸ்வரன் கடுமையாக தாக்கியுள்ளார். இதனைப்பார்த்து அழுது கொண்டிருந்த குழந்தையை பிளாஸ்டிக் பைப்பால் தலையில் அடித்ததாக தம்பதியினர் கூறுகின்றனர். மேலும், ஈஸ்வரன் தகாத வார்த்தைகளால் திட்டியும், தனது மதத்தை கொச்சப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, ஈஸ்வரன் கூறுகையில், “என் மீது வழக்கு கொடுத்தால் உன்னை நிர்வாணப்படுத்தி விடுவேன் என்றும், என் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன எனவும், மேலும் எனது வீட்டில் இருக்கிற கத்தியை எடுத்து நீ குத்த வந்ததாக பொய் புகார் அளித்து உங்களது வீட்டை காலி செய்து விடுவேன்” என்று மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து முருகனும், பிரின்சியும் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, அளித்த புகாரின் பேரில் ஈஸ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஈஸ்வரன் தப்பித்துக் கொள்வதற்காக, மனைவி மஞ்சுளாவை வைத்து மதமாற்றம் செய்ததாகவும், தன்னை தாக்கியதாகவும் பொய் புகார் அளித்ததாக இருவரும் கூறுகின்றனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர், ஈஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையுடன் தம்பதியினர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.

இதையும் படிங்க:விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.