திண்டுக்கல்: ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா தனது சொந்த ஊரான சிவகாசியில் இன்று (ஏப்.6) காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர் அங்கிருந்து ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளபட்டி பகுதிக்கு வருகை தந்து வாக்குபதிவைப் பார்வையிட்டார்.
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ஆண்களுக்கு இணையாக பெண்களும் வாக்களிக்கின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணியின் தேர்தல் அறிக்கை மக்களை கவர்ந்துள்ளது. ஆத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி அமோக வெற்றி பெறும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்!