திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடி என்ற பகுதியில் அமைந்துள்ள பொன்மலை கரடு மலை அடிவாரத்தில் தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையிலான தலைமையிலான குழுவினர் அகழாய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மலையின் வடகிழக்கு மூலையில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால நினைவு சின்னம் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இயற்கையான ஒரு பாறையின் மீது இரண்டு உருண்டை பாறாங்கற்களை வைத்து, அவற்றின் மீது இன்னொரு மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்து 'ஃ' வடிவில் அந்த நினைவுச் சின்னமானது அமைந்துள்ளது.
இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பொருங்கற்கால சின்னங்கள் 2 ஆயிரத்திலிருந்து, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதாகவே கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னிமலை கரடில் கண்டறியப்பட்டுள்ள இந்த நினைவு சின்னமானது 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர் நாராயண மூர்த்தி வியப்புடன் தெரிவித்தார்.
மேலும், ஆஸ்திரேலிய பழங்குடிகளோடு தமிழர்கள் கொண்டிருக்கும் ரத்த உறவையும் இந்த நினைவு சின்னமானது உறுதிபடுத்துவதாக அவர் கூறினார்.