ETV Bharat / state

சாலையைக் கடக்க முயன்ற முதியவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - Ottenchatram Government Hospital

திண்டுக்கல் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானது பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 11, 2022, 5:30 PM IST

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே வல்ல குண்டாபுரத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து(67). இவர் அம்பிளிக்கை அருகே உள்ள நாற்றுப் பண்ணைக்கு செல்வதற்காக நான்குவழிச் சாலையை கடக்க முயன்ற போது திருப்பூரிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த கார் பின்னால் பலமாக மோதியது.

இதில், செல்லமுத்து தூக்கி வீசபட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இச்சம்பம் குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த செல்லமுத்து உடலை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய திருப்பூரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் சந்தோஷ் என்பவரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சாலையைக் கடக்க முயன்ற முதியவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

இதையும் படிங்க: தென்காசியில் திருமணமான 2 நாளில் மணப்பெண் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.