ETV Bharat / state

வேலூரில் தேர்தல் நின்றதற்கு காரணம் துரைமுருகன் - ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு

திண்டுக்கல்: வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நின்றதற்கு துரைமுருகன்தான் காரணம் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏ.சி.சண்முகம்
author img

By

Published : May 5, 2019, 10:33 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் புதிய நீதிக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தபோது மாவட்ட விளையாட்டு அரங்கு அருகே அதிமுகவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வேலூரில் எனக்காக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நாள் முழுவதும் தேர்தல் பரப்புரை செய்தனர். அதனால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சூலூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் துரைமுருகன் சூளுரையாற்றினார். ஆனால் ஆட்சியும் மாறாது, காட்சியும் மாறாது, அவருடைய கனவு தான் மாறும். நாடாளுமன்றத் தேர்தல் நடந்திருந்தால் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். இது தெரியாமல் துரைமுருகன் கற்பனையில் பேசிக்கொண்டிருக்கிறார். வேலூர் தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு துரைமுருகன் தான் காரணம்.

வேலூரில் தேர்தல் நின்றதற்கு காரணம் துரைமுருகன்

அவருடைய வீட்டில் தான் கட்டுக்கட்டாக ரூபாய் 13 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாகத்தான் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை தள்ளி வைத்தது"என்றார்.

திண்டுக்கல் 

வேலூரில் தேர்தல் நின்றதற்கு காரணம் துரைமுருகன் தான் என புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் பேட்டி.

மதுரை திருப்பரங்குன்றம்  புதிய நீதிக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கு அருகே அதிமுகவினர்  சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

அப்போது ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வேலூரில் எனக்காக நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நாள் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். அதனால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

இந்நிலையில் சூலூரில் நடைபெற்ற திமுக கூட்டத்திற்கு துரைமுருகன் சூளுரை யாற்றினார். ஆனால் ஆட்சியும் மாறாது, காட்சியும் மாறாது, அவருடைய கனவு தான் மாறும். கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூரில் 3 தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றி பெற்றது. அதனால் வேலூர் அதிமுகவுடைய கோட்டை. எனவே நாடாளுமன்றத் தேர்தல் நடந்திருந்தால் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். இது தெரியாமல் துரைமுருகன் கற்பனையில் பேசிக்கொண்டிருக்கிறார். வேலூர் தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு துரைமுருகன் தான் காரணம். 

அவருடைய வீட்டில் தான் கட்டுக்கட்டாக ரூபாய் 13 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை தள்ளி வைத்துள்ளது. மீண்டும் வேலூரில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று டெல்லி வரை சென்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். மீண்டும் தேர்தல் வந்தால் வேலூரில் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும்" என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.