ETV Bharat / state

பஞ்சர் ஒட்ட வந்த காருடன் எஸ்கேப் ஆன இளைஞர்... அரை மணி நேரத்தில் சிக்கிய பரிதாபம்!

author img

By

Published : Mar 18, 2020, 7:13 PM IST

திண்டுக்கல்: பஞ்சர் கடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை அந்தக் கடையில் பணிபுரிந்த இளைஞரே கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

a youngster arrested for car theft in dindugul

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செக்போஸ்டில் அண்ணாதுரை என்பவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் நேற்று கொசவபட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் தனது இன்னோவா காரை பஞ்சர் பார்த்துவிட்டு, அங்கேயே காரை நிறுத்திவிட்டு சொந்த வேலை காரணமாக கேரளா சென்றுவிட்டார்.

இதனிடைடே பஞ்சர் கடையில் பத்து நாள்களுக்கு முன்பு பெரியகுளம் மதுராபுரியைச் சேர்ந்த செல்வேந்திரன் என்ற இளைஞர் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ளார். நேற்று இரவு பணியை முடித்துவிட்டு அண்ணாதுரை தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

கடத்தப்பட்ட கார்

உரிமையாளர் இல்லாததால், இதுதான் சமயம் என்று கடையில் தனியாக இருந்த செல்வேந்திரன் நள்ளிரவில் இன்னோவா காரை யாருக்கும் தெரியாமல் கடத்திச் சென்றுவிட்டார். கடைக்கு அருகில் இருந்தவர்கள் கார் செல்வதைப் பார்த்து அண்ணாதுரையை போனில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அளித்த அரை மணி நேரத்தில் காவல் துறையினர் காரையும் செல்வேந்திரனையும் செம்பட்டி அருகே வைத்து மடக்கிப் பிடித்தனர். செல்வேந்திரனைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தடையை மீறி செம்புழுக்களை கடத்த முயன்ற 4 பேர் கைது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.