திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட முதலாவது வார்டு கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (38). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே சுற்றித்திரிவது வழக்கம்.
போதை தலைக்கேறிய இளைஞர்
இந்நிலையில் நேற்றுமாலை (ஏப். 19) அவர் வசிக்கும் வீட்டின் அருகே நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த கெளதம் என்ற போதையிலிருந்த இளைஞர், மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரிடமிருந்து தப்பிய நாகேந்திரன் அவரது வீட்டுக்குள் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் அரை மணி நேரத்திற்குப்பின் வந்த கெளதம் போதை தலைக்கேறிய நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட நாகேந்திரனை அவரது வீட்டுக்குள்ளேயே சென்று பிளேடால் தலை, முகம் ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளார்.
அலறியடித்த நாகேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், நாகேந்திரனின் தாயார் ஜக்கம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், நிலக்கோட்டை காவல் துறையினர் கெளதமை கைதுசெய்து நிலக்கோட்டை குற்றவியல் நீதிபதி முன் முன்னிறுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'தண்டவாளத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்றியவருக்கு குவியும் பாராட்டுகள்!'