திண்டுக்கல் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் முருகன். இவர் பழனி முருகன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து மொட்டை அடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, ஒட்டன்சத்திரம் அருகே பேருந்தில் இருந்து இறங்கி அதிகமாக மது அருந்திவிட்டு மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் படுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால், பேருந்துகள் அவ்வழியாகச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதைக் கண்ட அப்பகுதியினர் அவரை தூக்கி அப்புறப்படுத்தினர். ஆனால், அவர் நடுரோட்டிற்கு வந்து படுப்பதிலேயே குறியாக இருந்தார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினர் வந்து அவரை இழுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக்கேட்ட ரயில்வே ஊழியருக்கு சரமாரி அடி!