ETV Bharat / state

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் குலதெய்வக் கோயிலில் வழிபாடு..! - ஒரே குடும்பத்தை சேர்ந்த 75 பேர் குலதெய்வ கோவிலில் வழிபாடு

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் தங்களது குலதெய்வக் கோயிலில் வழிபாடு செய்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 75 பேர் குலதெய்வ கோவிலில் வழிபாடு

author img

By

Published : May 16, 2022, 11:10 PM IST

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ளது ஜி.நடுப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 2 தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்தவர் உளியப்பகவுடர். இவருக்கு 5 திருணமங்கள் நடந்தன. 4 மனைவிகளுக்கு 9 மகன்கள் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி ஒரு கிராமத்தையே உருவாக்கினர்.

இவர்கள் வசித்த பகுதி நாட்டாமைக்காரத்தெரு என்று அழைக்கப்பட்டது. 4 மகன்களும் பொருளாதார தேவைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். அனைவரும் வெவ்வேறு ஊர்களில் வசித்தபோதும் குலதெய்வ வழிபாட்டுக்காக ஒன்று சேர்வது வழக்கம்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வெளிநாட்டில் இருந்தவர்கள் வர முடியவில்லை. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குலதெய்வக் கோயிலில் ஒன்றுகூட முடிவு செய்தனர்.

நடுப்பட்டியை சேர்ந்த கருணாகரன், முத்துராமன், புதுமைராஜன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்து அவர்கள் அனைவரையும் ஊருக்கு வரவழைத்தனர். உளியப்பகவுடரின் 4 மகன்கள், அவர்களது குழந்தைகள் என மொத்தம் 75 பேர் குலதெய்வ கோயிலில் ஒன்றுகூடி வழிபட்டனர்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ஒன்றுகூடி தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு வழிகாட்டியாக இருந்த முன்னோர்கள் இல்லாத சூழ்நிலையிலும் குலதெய்வக் கோயிலில் ஒன்று சேர்ந்து வழிபட்டது மனதிற்கு திருப்தியை அளித்தது என அவர்கள் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 75 பேர் குலதெய்வ கோவிலில் வழிபாடு

இதையும் படிங்க : திருமண விழாவில் சாதி அடிப்படையில் உணவு பரிமாறிய அவலம் - போலீசார் வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.