ETV Bharat / state

கொடைக்கானலில் கஞ்சா, போதை காளான் விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது

கொடைக்கானலில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரைக் கைது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடைக்கானலில் கஞ்சா, போதை காளான் விற்பனையில் ஈடுபட்ட 6 பேர்- கைது

author img

By

Published : Jul 18, 2022, 10:07 PM IST

திண்டுக்கல் அருகே கொடைக்கானல் நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் விற்பனை குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் கொடைக்கானல் காவல் துறை சார்பில் மேல்மலை மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் இன்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேல் மலைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் திரிந்த சிலரை விசாரித்தனர். அப்போது மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த வைரவேல், லட்சுமணன் , மதன்குமார் மற்றும் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ், கவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன், மேலும் கேரள மாநிலத்தை சேர்ந்த சரத் குமார் ஆகியோர் கஞ்சா மற்றும் போதை காளான் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர்களை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் போதை கலந்த காளான் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம், 4 மாணவர் சங்க நிர்வாகிகள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.