திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க பில்லர் ராக் , பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. ஆனால், சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பாம்பார்புரம் வனப்பகுதியில் 500 வருட பழமையான நாவல் மரம் அமைந்துள்ளது.
இந்த மரம் அமைந்துள்ள பகுதி மிக ரம்மியமாக காட்சியளிக்கும். இங்குச் சிட்டுக் குருவிகள், பறவைகள், சிறு வண்டுகள் சத்தங்கள் சுற்றுலாப்பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கின்றது. இந்த மரத்தின் உள் பகுதி 3 முதல் 5 பேர் வரை உட்காரும் வகையில் உள்ளது.
இந்நிலையில், இந்த மரத்தை சுற்றி புதர்கள் மண்டி காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே 500 வருட மரம் என கூறப்படும் நாவல் மரத்தை பராமரித்து சுற்றுலாப் பயணிகளை அருகில் சென்று பார்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் ,சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடலாடிகளின் போராட்டங்கள் நெஞ்சுரத்தைத் தருபவை - இன்று உலக மீனவர்கள் தினம்!