ETV Bharat / state

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச்சென்ற புது மாப்பிள்ளை வெட்டி கொலை; 5 பேர் கைது - புதுமாப்பிள்ளை வெட்டி கொலை

திண்டுக்கல் ஏர்போர்ட் நகர் அருகே நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற புது மாப்பிள்ளை வெட்டிப் படுகொலை‌ செய்யப்பட்டது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை
கொலை
author img

By

Published : Apr 20, 2022, 7:07 PM IST

திண்டுக்கல்: அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரபாகரன். இவருக்கு தென்றல் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து 15 நாட்கள் மட்டுமே ஆகின்றன.

இந்த நிலையில் இவர், சிலுவத்தூர் சாலையில் உள்ள ஏர்போர்ட் நகர் பகுதியில் சூர்யா என்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நண்பர்களான கார்த்தி, குணசேகரன் ஆகியோருடன் சென்றுள்ளார்.

அரிவாள் வெட்டு: அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் பிரபாகரனை சரமாரியாக வெட்டினர். இதைத்தடுக்க முயன்ற கார்த்திக் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.

இதனை அடுத்து, உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அத்துடன் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

5 பேர் கைது: நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், ஏர்போர்ட் நகர் பகுதியில் பதுங்கியிருந்த ஜம்புளியம்பட்டியைச் சேர்ந்த பசுங்கிளி மகன் ராஜ்குமார்(19), ஏர்போர்ட் நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் ராஜேஸ்வரன்(20), பெரிய பள்ளபட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஸ்ரீதர்(21), பெரிய பள்ளபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் ரஞ்சித்(21), ஜம்புளியம்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் கரண்குமார்(21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தாய், மகன் கொடூரமாக வெட்டிக் கொலை - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.