ETV Bharat / state

திண்டுக்கல்லில் நான்கு நாட்களில் 4 கொலைகள் - அச்சத்தில் மக்கள்! - போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு நாட்களில் நான்கு கொலை சம்பவங்கள் நடந்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Dindigul
Dindigul
author img

By

Published : Jul 10, 2022, 9:53 PM IST

திண்டுக்கல்: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக கொலைகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களாக எந்தவித கொலை சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடர் கொலைகள் அரங்கேறியுள்ளது.

கடந்த நான்கு நாட்களில் நான்கு கொலைகள் நடந்துள்ளன. நேற்று(ஜூலை 9) இரவு மது போதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய ரவுடி கொல்லப்பட்டார். இன்று(ஜூலை 10) பஞ்சம்பட்டியில் அருள்நாதன்(60) என்ற முதியவரை சந்துரு(28) என்ற இளைஞர் கட்டையால் அடித்து கொலை செய்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சின்னாளப்பட்டி காவல்துறையினர் சந்துருவை கைது செய்தனர். வேடசந்தூரில் ஒருவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதுபோன்ற அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.