திண்டுக்கல் மாவட்டத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 65 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 64 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் நலம் பெற்றதன் அடிப்படையில், 21 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து திண்டுக்கல்லில் உள்ள தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார்.
குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு, தங்களது வீட்டில் தாங்களாகவே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.
இதையும் படிங்க: சென்னையில் வீடு வீடாகச் சென்று 1 கோடி பேரிடம் கரோனா ஆய்வு