திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், நேற்று (ஜூலை 26) புதிய உச்சமாக ஒரே நாளில் 203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,318ஆக அதிகரித்துள்ளது.
இதில், 1,683 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 600 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனிடையே, திண்டுக்கல்லில் நேற்று மட்டும் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு 80 பேர் வீடு திரும்பினர். உடனடியாக சுகாதாரப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைக்கின்றனர்.
மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தகுந்த இடைவெளி மற்றும் கரோனா நோய்த்தொற்று குறித்து அதிகப்படியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.