ETV Bharat / state

ஓரடி உயரம் கொண்ட 1500 விநாயகர் சிலைகள் வழங்கிய இந்து முன்னணி!

திண்டுக்கல்: கொடைக்கானலில் துளசி, அருகம்புல் மற்றும் காட்டு மரங்கள் விதைகள் கொண்டு உருவாக்கப்பட்ட ஓரடி உயரம் கொண்ட 1500 விநாயகர் சிலைகள் இந்து முன்னணி கட்சியினரால் வழங்கப்பட்டுள்ளது.

vina
vina
author img

By

Published : Aug 20, 2020, 6:19 PM IST

கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொதுஇடத்தில் விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் துளசி, அருகம்புல் மற்றும் காட்டு மரங்கள் விதைகள் கொண்டு உருவாக்கப்பட்ட ஓரடி உயரம் கொண்ட 1500 விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு இந்து முன்னணி கட்சியினரால் வழங்கப்பட்டது.

இவற்றிக்கு வீட்டில் பூஜைகள் செய்யப்பட்டு வீட்டிற்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நகரின் முக்கியப்பகுதிகளை சேர்ந்த 1500 பெண்களுக்கு விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டு வருகிறது.

முன்னதாக கரோனா காலத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வருகிற 22ஆம் தேதி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் திட்டமிட்டபடி பிரதிஷ்டை செய்யப்படும் என இந்து முன்னணி கட்சியினர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.