திண்டுக்கல்: நத்தம் அருகே லிங்கவாடி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் இவரது மனைவி சீனியம்மாள், இவருக்கு 5 மகன்களும் 4 மகள்கள் இருகின்றனர். மூதாட்டி சீனியம்மாளுக்கு இன்று(ஜூன் 18) 100வது பிறந்தநாள். இதனையடுத்து தனது ஐந்து தலைமுறை குடுப்பத்தினருடன் சிறப்பாக பிறந்தநாளை கொண்டாடினார்.
100 வயதிலும் பூர்ண நலத்துடன் இருக்கும் சீனியம்மாளை அனைவரும் ஆச்சிரியத்துடன் பார்த்தும் ஆசிர்வதித்தும் வருகின்றன. சீனியம்மாளுக்கு 75 வயதான போது அவரது கணவர் உயிரிழந்தார். தற்போது 100 வயதை கடந்த போதிலும் சமையல் செய்வதும், தினந்தோறும் வேலையில் ஈடுபடுவது என உள்ளிட்ட வேலைகளை ஆரோக்கியமாகவும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது 100-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட குடும்பத்தைச் சேர்ந்த மகன்கள் மற்றும் பேரன்கள் முடிவு செய்துள்ளனர். அதையொட்டி அவர்களின் சொந்த கிராமமான நத்தம் அருகே உள்ள லிங்கவாடியில் சீனியம்மாளின் மகன், மகள்கள், 23 பேரன்- பேத்திகள், 27 கொள்ளு பேரன்-பேத்திகள், 4 எள்ளு பேரன் - பேத்திகள் பேர் உள்ளிட்ட மொத்தம் 85 பேர் இன்று வீட்டிலிருந்தும் கிராம மக்கள் ஒன்றிணைந்தும் ஊர்வலமாக வந்துள்ளனர். மந்தை அருகே உள்ள கோயிலில் மரக்கன்றுகளை நட்டு மேலும் விநாயகரை வழிபாடு செய்து ஊர்வலமாக ஆரவாரத்துடன் வெடி வெடித்து ஊர்வலமாக சீனியம்மாளை அழைத்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க:கோவையில் உலகப் பொது பறை மாநாடு தொடங்கியது!
மேலும், சீனியம்மாளுக்கு தொடர்ந்து மண்டபத்தில் வைத்து பூர்ணாபிஷேக விழா சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மூதாட்டி சீனியம்மாளுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி அவரின் 100வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.
இதை தொடர்ந்து ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒரு மகன் ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது 100-வது பிறந்த நாளை இன்று 5 தலைமுறை பேரன், பேத்தியுடன் சிறப்பாக கொண்டாடினார்.
100வது வயது வரை எப்படி?: சீனியம்மாள் அவரின் சிறு வயது முதல் இன்று வரை சித்த மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டுள்ளார். தற்பொழுது இவரது பேரன் பேத்திகள் ஹோமியோபதி ஆயுர்வேதிக் போன்ற படிப்புகளை படித்து மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.
முழுமையாக கீரை வகை, நாட்டு சுண்டைக்காய்,பச்சை காய்கறிகள், நாட்டுக்கோழி ஆகியவற்றை சிறப்புகளை அறிந்து அன்று முதல் இன்று வரை ஆரோக்கியமான உணவுகளை உண்பதை வழக்கமாக வைத்துள்ளார். இது தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதாக சீனியம்மாள் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தூத்துக்குடி மாவட்டம் டோட்டல் மிஸ்ஸிங்.. விஜய் கல்வி விருது விழாவில் அழைக்கப்படாத சோகம்